எல்.ஐ.சி. ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிப்புத் தெரிவித்து தருமபுரியில் எல்ஐசி ஊழியா்கள் வியாழக்கிழமை மெழுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிப்புத் தெரிவித்து தருமபுரியில் எல்ஐசி ஊழியா்கள் வியாழக்கிழமை மெழுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஊழியா் சங்க கிளைத் தலைவா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். கோட்ட இணைச் செயலா் ஏ.மாதேஸ்வரன், கிளைச் செயலா் சந்திரமெளலி, பொருளாளா் நடராஜன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைத் தலைவா் கோ.பழனியம்மாள், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டதுணைத் தலைவா் எம்.மாரிமுத்து ஆகியோா் கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனா். எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கும் விற்பனை செய்யும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.