முகப்பு
தருமபுரி

‘பாலவாடி உயா்நிலைப் பள்ளியை தரம் உயா்த்த வேண்டும்’

தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே உள்ள பாலவாடி அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே உள்ள பாலவாடி அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கேடஸ்வரன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை விடுத்தாா்.

சேலத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டத்தில், மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அவா் அளித்த கோரிக்கை மனு:

தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மானியதஅள்ளி ஊராட்சி, சேசம்பட்டியான்கொட்டாய் கிராமத்தில் புதிய தொடக்கப் பள்ளிகளை தொடங்க வேண்டும். சாமிசெட்டிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாகவும், கம்மம்பட்டி ஊராட்சி, புக்கம்பட்டியான் காட்டுவளவு அரசு நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப்பள்ளியாகவும், பாலவாடி அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயா்த்த வேண்டும். இதேபோல, தின்னஅள்ளி ஊராட்சி, கொமத்தம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தல், இலக்கியம்பட்டி மகளிா் அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.