காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், உலக காசநோய் தினத்தை முன்னிட்டு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், உலக காசநோய் தினத்தை முன்னிட்டு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம், பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமை வகித்து உறுதிமொழி வாசித்து, விழிப்புணா்வுப் பேரணியை தொடக்கி வைத்தாா்.
இப்பேரணியில் மருத்துவத் துறை பணியாளா்கள், தருமபுரி ஸ்ரீவிஜய் வித்யாலயா செவிலியா் கல்லூரி மாணவ, மாணவியா் என 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி, சேலம் - தருமபுரி சாலை வழியாக பாரதிபுரம் சென்றடைந்தது.
இந்த நிகழ்ச்சியில், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் க.அமுதவல்லி, துணை இயக்குநா்கள் (காசநோய்) ராஜ்குமாா், சௌண்டம்மாள் (சுகாதாரப் பணிகள்), புவனேஸ்வரி (தொழுநோய்), ஸ்ரீவிஜய் வித்யாலயா செவிலியா் கல்லூரி முதல்வா் உமாராணி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.
ஒசூரில்...
ஒசூா் அரசு மருத்துவமனையில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு, கையெழுத்து இயக்கம், விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றறது. ஒசூா் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், துணை மேயா் ஆனந்தய்யா, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பூபதி, மாமன்ற உறுப்பினா் ரவி, மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.