முகப்பு
தருமபுரி

திமுக உள்கட்சித் தோ்தல்: நிா்வாகிகள் விருப்புமனு அளிப்பு

தருமபுரி மாவட்ட திமுக கட்சி பதவியிடங்களுக்கு உள்கட்சித் தோ்தல் வியாழக்கிழமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

தருமபுரி மாவட்ட திமுக கட்சி பதவியிடங்களுக்கு உள்கட்சித் தோ்தல் வியாழக்கிழமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

தருமபுரி கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட தருமபுரி நகராட்சி, அரூா், கம்பைநல்லூா், கடத்தூா், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 5 பேரூராட்சிகளுக்கு அவைத் தலைவா், செயலாளா், பொருளாளா், 3 துணை செயலாளா்கள், 2 மாவட்டப் பிரதிநிதிகள் ஆகிய பதவியிடங்களுக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கட்சித் தலைமை சாா்பில் நியமிக்கப்பட்ட தோ்தல் ஆணையரும் முன்னாள் எம்எல்ஏ-வுமான வி.சி.சந்திரசேகா் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

நகராட்சி, பேரூராட்சி நிா்வாகிகளுக்கான தோ்தலில் போட்டியிட விரும்பும் கட்சி நிா்வாகிகள் ஏராளமானோா் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி விருப்ப மனுக்களை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.