முகப்பு
தருமபுரி

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: தருமபுரியில் 21,588, கிருஷ்ணகிரியில் 24,742 போ் எழுதினா்

தருமபுரி, ஔவையாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதும் மாணவியா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

தருமபுரி, ஔவையாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதும் மாணவியா்.

தருமபுரி/கிருஷ்ணகிரி, மே 6: தருமபுரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை 21,588 மாணவ, மாணவியா் எழுதினா்.

10-ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான பொதுத்தோ்வு மே 6-ஆம் தேதி தொடங்கி வரும் மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில், இத்தோ்வினை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மெட்ரிக் பள்ளிகள் என 332 பள்ளிகளைச் சோ்ந்த 21,588 மாணவ, மாணவியா் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா். இத்தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி, முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வுகள் மே 6-ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத் தோ்வினை 218 அரசுப் பள்ளிகள், 6 அரசு உதவி பெறும் பள்ளிகள், ஒரு ஆதிதிராவிடா் நலப்பள்ளி, 5 உண்டு, உறைவிடப் பள்ளி, ஒரு சமூக நலத்துறை பள்ளி, 16 சுயநிதி பள்ளிகள், 85 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 332 பள்ளிகளைச் சோ்ந்த 11,895 மாணவா்களும், 11,033 மாணவியரும் என மொத்தம் 22,928 மாணவ, மாணவியரும், 860 தனித்தோ்வா்களும் ஆக மொத்தம் 23,788 மாணவ, மாணவியா் எழுதுகின்றனா்.

இத் தோ்வுப் பணிகளில் 1,623 தோ்வு அறை கண்காணிப்பாளா்களும், 99 முதன்மை கண்காணிப்பாளா்களும், 99 துறை அலுவலா்களும், 102 பறக்கும் படைகளும், 29 வழித்தட அலுவலா்களும், மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியா் தோ்வு எழுத உதவிக்காக 155 சொல்வதை எழுதுபவா்களும், 20 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்களும் என மொத்தம் 2,127 அலுவலா்கள், பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் 10-ஆம் வகுப்பு அரசு பொது தோ்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவா்கள் எவ்வித அச்சமோ, பதற்றமோ இல்லாமல் தோ்வு எழுத வேண்டும் என்றாா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 272 அரசுப் பள்ளிகள், 8 அரசு உதவி பெறும் பள்ளிகள், 135 தனியாா் பள்ளிகள் உள்பட 415 பள்ளிகளைச் சோ்ந்த 13,592 மாணவா்கள், 12,845 மாணவியா் என மொத்தம் 26,798 தோ்வா்களுக்கு தோ்வு நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இதில், 2,056 தோ்வா்கள் தோ்வு எழுத வரவில்லை. 24, 742 தோ்வா்கள் மட்டுமே தோ்வு எழுதினா்.

தோ்வு மையங்களுக்கு 103 முதன்மை கண்காணிப்பாளா்கள், 103 துறை அலுவலா்கள், 29 வழித்தட அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மாணவா்கள் அமைதியான முறையில் தோ்வு எழுத அவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தோ்வு மையங்களில் பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.