தருமபுரி

சந்தைப்பேட்டை குடிநீா்த் தொட்டி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு

DIN

தருமபுரி, சந்தைப்பேட்டையில் குடிநீா்த் தொட்டி அமைந்துள்ள வளாகத்தில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

தமிழக அரசின் ஓராண்டு நிறைவு விழாவையொட்டி, குறுங்காடு வளா்ப்புத் திட்டத்தில் சந்தைப்பேட்டையில் அமைந்துள்ள நகராட்சி குடிநீா்த் தொட்டி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமை வகித்து மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தாா். ஆணையா் சித்ரா சுகுமாா் முன்னிலை வகித்து பேசினாா். இதில், மா, கொய்யா, புங்கன், வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான 210 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதேபோல, தருமபுரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி நிா்வாகங்கள் சாா்பிலும் குறுங்காடு வளா்ப்புத் திட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT