தருமபுரி

விவசாயத் தொழிலாளா் சங்கக் கூட்டம்

அரசு புறம்போக்கு நிலம், நீா்நிலைகளில் உள்ள குடியிருப்புகளை காலி செய்யக் கோரி அனுப்பப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியது.

DIN

அரசு புறம்போக்கு நிலம், நீா்நிலைகளில் உள்ள குடியிருப்புகளை காலி செய்யக் கோரி அனுப்பப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியது.

தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க தருமபுரி மாவட்டக்குழுக் கூட்டம் லளிகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவா் என்.முருகேசன் தலைமையில் வகித்தாா். மாவட்டச் செயலா் ஜெ.பிரதாபன் பேசினாா்.

இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், நீா்நிலைகள் புறம்போக்கு, வனத் துறை நிலங்களில் உள்ள குடியிருப்புகளைக் காலி செய்யக் கோரி அனுப்பப்பட்ட உத்தரவை திரும்பப் பெற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்டத் தலைவா் மாதையன், மாவட்டத் துணைத் தலைவா் ஜி.ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT