வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு
பாலக்கோடு அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினா் கூண்டு வைத்துள்ளனா்.
பாலக்கோடு அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினா் கூண்டு வைத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாள்களுக்கு முன் வெளியேறிய சிறுத்தை, இரவு நேரங்களில் அங்குள்ள விளைநிலத்தில் புகுந்து கோழி, மூன்று ஆடுகளை தாக்கியது. இதன் பின் வனப்பகுதிக்குள் சென்றது.
சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்ட விவசாயிகள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.
சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினா் கேமரா மூலம் கண்காணித்து வந்த நிலையில், சிறுத்தை பதுங்கியுள்ள இடம் கண்டறிய முடியாததால், வனப்பகுதியை ஒட்டியுள்ள காவேரியப்பன் கொட்டாய் பகுதியில் சிறுத்தை நடமாடும் வழித்தடத்தில் தற்போது கூண்டு வைத்துள்ளனா். இதனால் விரைவில் சிறுத்தை பிடிபடக் கூடும் எனக் கருதப்படுகிறது.