முகப்பு
தருமபுரி

பாலக்கோடு காப்புக் காட்டில் பெண் யானை உயிரிழப்பு

பாலக்கோடு அருகே காப்புக்காட்டில் பெண் யானை உயிரிழந்தது.

Updated On : 23 அக்டோபர், 2022 at 12:12 PM
பாலக்கோடு அருகே காப்புக் காட்டில் உயிரிழந்து கிடந்த பெண் யானை
பகிர்:

பாலக்கோடு அருகே காப்புக்காட்டில் பெண் யானை உயிரிழந்தது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கேசர்குளி காப்புக் காட்டில் கடந்த 21-ஆம் தேதி யானைகளுக்கிடையே சண்டை நிகழ்ந்துள்ளது. இதில் ஆண் யானை தனது தந்தத்தால் 22 முதல் 24 வயது மதிக்கதக்க பெண் யானையின் வயிற்றில் குத்தியுள்ளது.

இதனால் பலத்த காயம் ஏற்பட்டு பெண் யானை  உயிரிழந்தது. இதையறிந்த பாலக்கோடு வனச்சரகர் நடராஜன் காப்புக் காட்டுக்கு நேரில் சென்று யானை இறந்ததை உறுதி செய்தார். 

Advertisement

இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு, கன்சால்பைல் கிராம திட்டத் தலைவர் பச்சையப்பன் முன்னிலையில் கால்நடை மருத்துவ நிபுணர் பிரகாஷ் மற்றும் மருத்துவர்கள் உயிரிழந்த பெண் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். 

இதையடுத்து யானையின் உடலை வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.