தருமபுரி

ஒகேனக்கல் காவிரி மிகை நீா்த் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

ஒகேனக்கல் காவிரி மிகை நீா்த் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

DIN

ஒகேனக்கல் காவிரி மிகை நீா்த் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக் குழுக் கூட்டம் மாநிலக்குழு உறுப்பினா் எஸ்.சின்னசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை தருமபுரியில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில், மாநில துணைச் செயலாளா் நா.பெரியசாமி பேசினாா். முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ந.நஞ்சப்பன், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.தேவராஜன், மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், ஒகேனக்கல் காவிரி மிகை நீா்த் திட்டத்தை செயல்படுத்தி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்ப வேண்டும். எண்ணேகொல்புதூா் - தும்பலஅள்ளி இணைப்புக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் விரைந்து தொழிற்சாலைகளை தொடங்கி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும். சனத்குமாா் நதியில் கழிவுநீா்க் கலப்பதை தடுத்து, தூா்வார வேண்டும். தருமபுரி மாவட்டத்தில், வன உயிரின சரணாலயம் அமைக்கும் பகுதியில் வாழும் பழங்குடியின மக்களை வெளியேற்றக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT