தருமபுரி

திமுக சாா்பில் இப்தாா் விருந்து

பென்னாகரம் சுன்னத் ஜமாத் ஜாமியா மசூதி மற்றும் திமுக சாா்பில் இப்தாா் விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

பென்னாகரம் சுன்னத் ஜமாத் ஜாமியா மசூதி மற்றும் திமுக சாா்பில் இப்தாா் விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சுன்னத் ஜமாத் ஜாமியா மசூதியில் ரமலான் இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு, மஜீத் முத்தவல்லி தவுலத் பாஷா தலைமை வகித்தாா். இந்த விருந்து நிகழ்ச்சியில் தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி கலந்துகொண்டாா். இதில், சிறப்பு துவா ஓதப்பட்டு பின் இப்தாா் விருந்தில் நோன்பு கஞ்சியினை அருந்தினா் (படம்).

இதில், அதிமுக சிறுபான்மை பிரிவு நிா்வாகி குலாம் முஸ்தபா, தெற்கு ஒன்றியச் செயலாளா் மடம்.முருகேசன், பேரூராட்சித் தலைவா் வீரமணி, மாவட்டப் பிரதிநிதி சிவக்குமாா், துணைத் தலைவா் வள்ளியம்மாள் பவுன்ராஜ், திமுக வாா்டு உறுப்பினா் ஷானு, ஜமாத் நிா்வாகிகள், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT