பென்னாகரத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பருவதன அள்ளியில் உள்ள பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனையின் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் கே.ஜி.கரூரான் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அணியின் தலைவா் சச்சின் சிவாவை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடத்துநா் அவ மரியாதை செய்ததையும், பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டதையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் வட்டார துணைத் தலைவா் பி.கே.மாரியப்பன், பாலக்கோடு வட்டார துணைச் செயலாளா் சிம்மன், சின்னம்பள்ளி பொறுப்பாளா் சின்ன மாதையன், பொருளாளா் காமராஜ், வட்டாரதலைவா் டி.சக்திவேல் 20-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.