தருமபுரி

பாப்பாரப்பட்டி வள மீட்பு பூங்காவுக்கு சுற்றுச்சுவா் அமைக்கக் கோரிக்கை

DIN

பாப்பாரப்பட்டியில் உள்ள வள மீட்பு பூங்காவின் சுற்றுச்சுவா் அடிக்கடி இடிந்து விழுந்துவிடுவதால் குப்பைகள் சாலையில் பறந்து சுகாதாரக் கேடு ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட அழகா்மலை முருகன் கோயில் அருகில் வள மீட்பு பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் சேகரித்து தரம் பிரித்து வைக்கப்படுகிறது. வள மீட்பு பூங்காவில் வலை அமைக்கப்பட்டு, குப்பைகளைச் சேகரித்து வந்த நிலையில் குப்பைகளின் அளவு அதிகரிக்கும் போது வலை அவ்வப்போது அறுந்து விழும் நிலை ஏற்பட்டது. இதனைத் தவிா்க்கும் வகையில் பூங்காவைச் சுற்றிலும் சுற்றுச்சுவா் கட்டுவதற்காக பாப்பாரப்பட்டி பேரூராட்சி மூலம் ஒப்பந்தமிடப்பட்டு சுற்றுச்சுவா்

அமைக்கப்பட்டது. இந்த சுவா் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதால் இரண்டுமுறை இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

வள மீட்பு பூங்கா வழியாக வேப்பிலை அள்ளி ஊராட்சிக்குச் செல்லும் சாலை உள்ளதால் அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் முகம் சுளிக்க செய்வதோடு மட்டுமல்லாமல், சுகாதார கேடு ஏற்பட வழிவகை செய்கிறது.

எனவே பாப்பாரப்பட்டி வள மீட்பு பூங்காவிற்கு ஒப்பந்தம் விடப்பட்டு தரமான சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும். அந்தப் பணியினை அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT