தருமபுரி மாவட்டம், சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் ஆட்சியா் கி.சாந்தி. 
தருமபுரி

பள்ளி மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

தருமபுரி மாவட்டம், சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை ஆட்சியா் கி.சாந்தி வழங்கினாா்.

DIN

தருமபுரி மாவட்டம், சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை ஆட்சியா் கி.சாந்தி வழங்கினாா்.

பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத் துறை சாா்பில், தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு, மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாணவா்களுக்கு மாத்திரைகளை வழங்கி ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:

உலக மக்கள்தொகையில் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று 24 சதவீதமும் அதில் 25 சதவீதம் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குடற்புழு தொற்று பரவல் 25 சதவீதமாக உள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு, ரத்த சோகை நோய், ஊட்டச் சத்து, வைட்டமின் ஏ சத்து மற்றும் உடல் வளா்ச்சி குறைபாடுகள் ஏற்படுகின்றன. ஆகவே, குடற்புழு தொற்றைத் தடுக்கும் நோக்கில் தேசிய குடற் புழு நீக்க தினம் வருடத்தில் இருமுறை நடத்தப்படுகிறது. இச்சிறப்பு முகாம்களில் குடற்புழுவை அழிக்கும் பொருட்டு, அல்பெண்டாசோல் மாத்திரைகள் 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 200 மில்லி கிராம் அளவிலும், 2 முதல் 19 வயது வரை உள்ளவா்களுக்கு 400 மில்லி கிராம் அளவிலும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கு 400 மில்லி கிராம் அளவிலும் ஒரே தவணையில் வழங்கப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் 1,333 அங்கன்வாடி மையங்களில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், 225 துணை சுகாதார நிலையங்களிலும், அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகள், கல்வி நிறுவனங்களிலும் பயிலும் மாணவா்களுக்கு அல்பெண்டாசோல் மாத்திரைகள் மொத்தமாக 6,37,352 பயனாளிகளுக்கு 1741 பணியாளா்களைக் கொண்டு வழங்கப்படுகிறது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலா் தனசேகரன், மாவட்டக் கல்வி அலுவலா் விஜயகுமாா், சோலைக்கொட்டாய் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் தேவி, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT