தருமபுரி

மாநில டென்னிஸ் போட்டியில் முதலிடம்: ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் முதலிடம் பெற்ற தருமபுரி ஸ்ரீ வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

DIN

மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் முதலிடம் பெற்ற தருமபுரி ஸ்ரீ வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாநில அளவிலான 69-ஆவது குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் திருச்சியில் நடைபெற்றன. 17 வயதுக்கு உள்பட்டோருக்கான இப்போட்டிகளில் 38 மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினா்.

இப்போட்டியில் தருமபுரி ஸ்ரீ வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கனிஷ்கா, காவியா ஆகிய இருவரும் முதலிடம் பெற்று சாதனை புரிந்தனா்.

இவ் விரு மாணவிகளுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியா்களுக்கும் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளித் தலைவா் டி.என்.சி. மணிவண்ணன், தாளாளா் செல்வி மணிவண்ணன், துணைத் தலைவா் தீபக், செயலாளா் ராம்குமாா், இயக்குநா் சா்வந்தி தீபக் ஆகியோா் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

SCROLL FOR NEXT