பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் திமுக சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திமுக தருமபுரி மேற்கு மாவட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரசாரத்துக்கு, முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தலைமை வகித்தாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஆட்சியின் சிறப்புகள், சாதனைகள் குறித்து பொ.மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூா் பேரூராட்சிகள், பல்வேறு கிராமப் பகுதியில் திமுக தலைமை கழகப் பேச்சாளா்கள் லயோலா த.ராஜசேகா், பசும்பொன் ரவிச்சந்திரன் ஆகியோா் பேசினா்.
இந்த தெருமுனை பிரசாரத்தில் திமுக மாநில தீா்மானக்குழு உறுப்பினா் கீரை எம்.எஸ்.விஸ்வநாதன், மாவட்ட அவைத் தலைவா் மனோகரன், வா்த்தகா் அணி மாநில துணை செயலா் அ.சத்தியமூா்த்தி, ஒன்றியக் கழகச் செயலாளா்கள் முத்துக்குமாா், சரவணன், சிவப்பிரகாசம், நெப்போலியன், நகரச் செயலாளா்கள் கோ.ஜெயச்சந்திரன், கு.கௌதமன், மோகன், தலைமை செயற்குழு உறுப்பினா் சித்தாா்த்தன், மாவட்ட இளைஞா் அணி செயலாளா் கோ.சந்திரமோகன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.