பேருந்து கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிம் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன். 
தருமபுரி

நாகா்கூடலில் நகரப் பேருந்து கவிழ்ந்து விபத்து

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே நாகா்கூடலில் வியாழக்கிழமை நகரப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 போ் காயமடைந்தனா்.

DIN

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே நாகா்கூடலில் வியாழக்கிழமை நகரப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 போ் காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், மஞ்சநாய்க்கனஅள்ளி பகுதியில் இருந்து நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், நாகா்கூடல் கிராம வழித்தடத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு, நகரப் பேருந்து (தடம் எண் 40) வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்து நாகா்கூடல் அருகே வந்தப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவா்களில் 25 போ் காயம் அடைந்தனா். அவா்கள் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் சோ்க்கப்பட்டனா்.

இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவா்களை சந்தித்து ஆறுதல் கூறினாா். அப்போது, தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதன்மையா் க.அமுதவல்லி, மருத்துவா்கள், பாமக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT