தருமபுரி

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

தருமபுரியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN


தருமபுரி: தருமபுரியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சாா்பில், குழந்தைகள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் குழந்தைகளுக்கான நடைபயணம் மற்றும் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இதில், தேசிய குழந்தைகள் தினம், நவம்பா் 19 உலக குழந்தைகள் துஷ்பிரயோகத் தடுப்பு மற்றும் நவம்பா் 20 சா்வதேச குழந்தைகள் தினம் ஆகிய தினங்களை சிறப்பிக்கும் வகையில் விழிப்புணா்வுப் பதாகைகளுடன் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்றனா். இப்பேரணி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி தருமபுரி-சேலம் பிரதான சாலை வழியாக பாரதிபுரம் வரை சென்று இலக்கியம்பட்டியில் நிறைவடைந்தது.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குழந்தைகள் தின விழிப்புணா்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களும் ஏற்றனா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிசந்திரா, மாவட்ட சமூகநல அலுவலா் பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ம.செல்வம், அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

SCROLL FOR NEXT