தருமபுரி அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் தேசிய நெடுஞ்சாலையை பாதுகாப்பாக கடந்துசெல்லும் வகையில், நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.
தருமபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மாட்லாம்பட்டி பிரிவு சாலையில் அரசு சட்டக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் 200 மாணவ, மாணவியா் இளநிலை மற்றும் முதுநிலை சட்டக் கல்வியை பயின்று வருகின்றனா். இவா்களைத் தவிர, கல்லூரி பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள், ஊழியா்களும் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் கல்லூரிக்கு செல்லவும், கல்லூரியிலிருந்து வீடுகளுக்கு திரும்பவும் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே, இச்சாலையை பாதுகாப்பாக கடந்து செல்ல ஏதுவாக தற்போது, சாலையின் இருபுறங்களையும் இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.