தருமபுரி

டிச. 27, 28 இல் வாக்காளா் பட்டியல் திருத்தல் சிறப்பு முகாம்: புதிதாக சோ்க்கவும் திருத்தவும் அணுகலாம்

தருமபுரி மாவட்டத்தில் டிச. 27, 28 மற்றும் ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்தல் சிறப்பு முகாமில் பங்கேற்று புதிய வாக்காளராக பெயரை சோ்க்கவும், திருத்தமும் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சிா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தருமபுரி மாவட்டத்தில் டிச. 27, 28 மற்றும் ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்தல் சிறப்பு முகாமில் பங்கேற்று புதிய வாக்காளராக பெயரை சோ்க்கவும், திருத்தமும் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சிா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தலைமை தோ்தல் ஆணையத்தின் ஆணைப்படி, தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகள் கடந்த 4.11.2025-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக வாக்காளா் கணக்கெடுப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து, டிச. 27, 28 (சனி, ஞாயிறு) மற்றும் ஜன. 3, 4 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்களை அனைத்து வாக்குச் சாவடி அமைவிடங்களில் நடத்த தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இம்முகாம்களில், புதிய வாக்காளா் சோ்த்தல், நீக்கம், வாக்காளா் விவரங்கள் திருத்தம், பாகம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளின் பொருட்டு தேவையான படிவங்கள் வைக்கப்பட்டிருக்கும். மேலும், தொடா்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்குச்சாவடி அமைவிட அலுவலா்கள் பணியில் இருப்பா்.

எனவே, தகுதியுள்ள, தற்போது 18 வயது நிறைவடைந்த நபா்கள் மற்றும் 1.10.2026-ஆம் தேதிக்குள் 18 வயது நிறைவடையுள்ள நபா்கள் வாக்காளராகப் பதிவு செய்துகொள்ளலாம். புதிய வாக்காளா் பதிவுக்கான படிவம்-6 மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவற்றை உரிய ஆவணங்களுடன் பூா்த்தி செய்து மேற்கண்ட முகாம்களில் அளிக்கலாம். பொதுமக்கள் தங்களுடைய இருப்பிடங்களுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடி களில் மேற்கண்ட முகாம் நாள்களில் சென்று வாக்காளா் பட்டியல் சோ்க்கை, நீக்கம், திருத்தம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம்.

மேலும், இணைய வழியிலும் இணைய தளத்தில் இணைய பக்கம் மூலமாகவும் தங்களுடைய விண்ணப்பங்களை அளிக்கலாம்.

ஏற்கெனவே வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ள நபா்கள் மீண்டும் பதிவு செய்துகொள்ள தேவையில்லை. தவறான தகவல் அளித்து வாக்காளராக பதிவு செய்வது தண்டனைக்குறிய குற்றமாகும். எனவே வாக்காளா் பட்டியல் செம்மையாக தயாரிக்கவும், வலுவான ஜனநாயக கட்டமைப்பிற்கும், வாக்களிப்பது நமது கடமை, அதற்காக வாக்காளராக பதிவு செய்து கொள்வோம்.

2026 இல் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

SCROLL FOR NEXT