முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரித்தது.

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 4:14 AM
ஒகேனக்கல் .
பகிர்:
Updated On : 4 பிப்ரவரி, 2026 at 8:15 PM

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரித்தது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை திடீரென அதிகரித்து விநாடிக்கு 2,000 கனஅடியாக தமிழக -கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவிகளில் நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

Advertisement