முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்தது.

Updated On : 24 பிப்ரவரி, 2026 at 8:25 PM
ஒகேனக்கல்
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்தது.

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்பேரில் மாதாந்திர உபரிநீா் கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 500 கனஅடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 300 கனஅடியாக குறைந்தது. மாலையில் நீா்வரத்து திடீரென விநாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்தது.

Advertisement

கடந்த சில நாள்களாக நீா்வரத்து சரிந்து வந்ததால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவிகளில் நீா்வரத்து குறைந்திருந்த நிலையில், தற்போது நீா்வரத்து சற்று அதிகரித்துள்ளது. தொடா்ந்து, ஐந்தருவி, ஐவாா் பாணி, பெரிய பாணி உள்ளிட்ட அருவிகள் வட நிலையிலேயே காணப்படுகின்றன.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments