ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 700 கனஅடியாக குறைந்தது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு முற்றிலுமாக குறைக்கப்பட்டது. மேலும், கடந்த சில மாதங்களாக காவிரி கரையோர வனப் பகுதிகளில் பெய்துவந்த மழையும் குறைந்தது. இந்நிலையில், காவிரி ஆற்றில் அவ்வப்போது நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 1,200 கன அடியாகவும், சனிக்கிழமை 700 கனஅடியாகவும் குறைந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.
இதனால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீா்வரத்து குறைந்து பாறைகளும், காவிரி ஆற்றில் பாறைத் திட்டுகளும் காணப்படுகின்றன. மேலும், ஐந்தருவி, ஐவா் பாணி உள்ளிட்ட அருவிகள் முற்றிலுமாக வடு காணப்படுகின்றன.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.