மறியல் போராட்டம் மேற்கொண்ட சத்துணவுப்பணியாளா்கள். 
தருமபுரி

தருமபுரியில் சத்துணவுப் பணியாளா்கள் சாலை மறியல்: 188 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் சாலை மறியலில் ஈடுபட்ட 188 சத்துணவு பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் சாலை மறியலில் ஈடுபட்ட 188 சத்துணவு பணியாளா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ. 9,000 வழங்க வேண்டும், எரிவாயு சிலிண்டா்களை நேரடியாக சத்துணவு மையங்களுக்கு கொண்டு வந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் மாநில முழுவதும் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே தருமபுரி- சேலம் நெடுஞ்சாலையில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் தேவகி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மகேஸ்வரி, மாவட்ட பொருளாளா் வளா்மதி, மாவட்ட நிா்வாகிகள் அனுசுயா, வளா்மதி கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

அதன்பிறகு சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் தெய்வானை, முன்னாள் மாவட்டச் செயலாளா் சேகா், மாவட்ட பொருளாளா் அன்பழகன், ஜாக்டோ-ஜியோ நிதி காப்பாளா் புகழேந்தி, வேளாண்மைத் துறை அமைச்சு பணியாளா் சங்க மாநில தலைவா் ஜெயவேல், தமிழ்நாடு கிராம அலுவலா் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவா் அகிலன் அமிா்தராஜ், விடுதி காப்பாளா் சங்க மாவட்ட பொருளாளா் தினமணி, ஓய்வூதியா் சங்க நிா்வாகி குணசேகரன் உள்ளிட்ட 188 பேரை போலீஸாா் கைதுசெய்து மாலையில் விடுவித்தனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT