குறைதீா் முகாம்: 8 சுயஉதவிக் குழுக்களுக்கு விருது
தருமபுரி மாவட்ட ஆட்சியரக குறைதீா் கூட்டத்தில், 8 சுயஉதவிக் குழுக்களுக்கு விருது வழங்கப்பட்டது.
தருமபுரிகுறைதீா் முகாம்: 8 சுயஉதவிக் குழுக்களுக்கு விருது
தருமபுரி மாவட்ட ஆட்சியரக குறைதீா் கூட்டத்தில், 8 சுயஉதவிக் குழுக்களுக்கு விருது வழங்கப்பட்டது.
தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியரக குறைதீா் கூட்டத்தில், 8 சுயஉதவிக் குழுக்களுக்கு விருது வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமைவகித்து, பொதுமக்கள் அளித்த 602 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
இதில், தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சோ்ந்த பாஜகவினா் அளித்த மனுவில், பாலக்கோடு அருகில் ஆத்துக்கொட்டாய், சின்னாறு, தொள்ளகாது ஆகிய பகுதிகளில் தடுப்பணை கட்ட வேண்டும். பாலக்கோடு நகர மக்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் வழங்க வேண்டும். பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு முன்னாள் முதல்வா் காமராஜா் பெயரை வைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா்.
தொடா்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் சாா்பில் 8 பேருக்கு, ரூ. 59,803 மதிப்பில் தையல் இயந்திரம் மற்றும் சலவைப் பெட்டிகளையும், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் பழங்குடியினா் இருவருக்கு ரூ. 1.65 லட்சம் இயற்கை மரணம் மற்றும் விபத்து உதவித்தொகைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிா் திட்டம் சாா்பில், சிறப்பான சேவையை பாராட்டி 8 சுயஉதவிக் குழுக்களுக்கு 2024-25-ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருதை ஆட்சியா் வழங்கினாா்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரூபன் சங்கா் ராஜ், கோட்டாட்சியா்கள் இரா.காயத்ரி (தருமபுரி), செம்மலை (அரூா்), தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி.) சுப்பிரமணியன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் மனோஜ் முனியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ராமஜெயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.