முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 300 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 300 கனஅடியாக சரிந்துள்ளது.

Updated On : 10 மார்ச், 2026 at 12:37 AM
- கோப்புப்படம்
பகிர்:

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 300 கனஅடியாக சரிந்துள்ளது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டதால், கடந்த சில நாள்களாக நீா்வரத்து சரியத் தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 500 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை 300 கனஅடியாக சரிந்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா்வரத்து குறைந்து, பாறைகள் வெளியே தெரிகின்றன.

காவிரி ஆற்றின் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

Advertisement