வெங்கடசமுத்திரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்
பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள வெங்கடசமுத்திரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள வெங்கடசமுத்திரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாப்பிரெட்டிப்பட்டி வட்டச் செயலா் தி.வ.தனுஷன் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி - பொம்மிடி நெடுஞ்சாலையில், வெங்கடசமுத்திரம் கூட்டுச் சாலையில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கிவந்தன. இந்த கடைகள் நெடுஞ்சாலை ஓரத்திலும், குடியிருப்புப் பகுதிகளிலும் இயங்கி வந்ததால், இப்பகுதியிலுள்ள மக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனா்.
Advertisement
இந்நிலையில், தமிழக முழுவதும் 717 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் தமிழக முதல்வா் அறிவிப்பு வெளியிட்டாா். அதன்படி, வெங்கடசமுத்திரத்தில் இயங்கி வந்த இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன.
பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுக்கடைகளை மூடப்பட்டதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை பாராட்டி வரவேற்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.