கிருஷ்ணகிரி

ஸ்ரீ விநாயகா பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

போச்சம்பள்ளி ஸ்ரீ வினாயகா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஓசூர் கார்போரண்டாம் யுனிவெர்சல் லிமிடெட் இணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.

DIN

போச்சம்பள்ளி ஸ்ரீ வினாயகா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஓசூர் கார்போரண்டாம் யுனிவெர்சல் லிமிடெட் இணைந்து வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.
முகாமில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு பயிலும் மெக்கானிக்கல் மற்றும் டூல்-டை துறை சார்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வில் 154 மாணவர்கள் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பை பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சரவணன் வரவேற்றார். கல்லூரியின் தலைவர் அரங்கநாதன் மற்றும் முதன்மையர் திருநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தனர். கார்போரண்டாம் யுனிவெர்சல் லிமிடெட் உதவி மேலாளர்கள் தமிழரசன் மற்றும் சங்கர் மாணவர்களுக்கு தேவையான அறிவுரைகளையும், வேலைவாய்ப்பின் முக்கியத்துவத்தையும், முக்கிய ஆலோசனைகளையும் வழங்கினர். நிகழ்ச்சியை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் குமார் ஏற்ப்பாடு செய்திருந்தார்.
நிகழ்ச்சியில், கல்லூரி செயலர் ராஜா அண்ணாமலை மற்றும் சுடலி லட்சுமி கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு பாரட்டுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவுப் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

SCROLL FOR NEXT