கிருஷ்ணகிரி

மதுப் புட்டிகள் கடத்தல்: 3 பேர் கைது

DIN

பெங்களூரிலிருந்து தருமபுரிக்கு கடத்திச் சென்ற 672 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த ஒசூர் போலீஸார், 3 பேரைக் கைது செய்தனர்.
ஒசூர் கலால் பிரிவு ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போலீஸார் வெள்ளிக்கிழமை டி.வி.எஸ். சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை செய்த போது, 672 மதுப் புட்டிகள் கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து, காரிலிருந்த 2 பேர் தப்பினர்.
மேலும் காரிலிருந்த மூவரையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த கும்மனூர் சூடனூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (30), கர்நாடக மாநிலம், ஆனேக்கல்லை அடுத்த பித்தூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த தப்ரேஷ்கான்(35), அதே பகுதியைச் சேர்ந்த அப்ரித்கான்(20) என்பது தெரிய வந்தது. தலைமறைவான பெங்களூரைச் சேர்ந்த குமார் என்கிற சிவக்குமார், அல்தாப் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT