ஒசூரில் சேலை இறுகி சிறுமி சாவு
ஒசூரில் தொட்டில் ஆடிக் கொண்டிருந்த சிறுமி, சேலை இறுகி உயிரிழந்தார்.
ஒசூரில் தொட்டில் ஆடிக் கொண்டிருந்த சிறுமி, சேலை இறுகி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், எழில் நகரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சாந்தா. இந்தத் தம்பதிக்கு பூர்ணிமா (8) என்ற மகள் இருந்தார். இந்த நிலையில் வீட்டில் சேலையில் தொட்டில் கட்டி, பூர்ணிமா விளையாடிக் கொண்டிருந்தாராம். அப்போது, பூர்ணிமாவின் கழுத்தில் சேலை இறுகியதால் மயக்கம் அடைந்தார்.
இந்த நிலையில், அருகில் இருந்தவர்கள், பூர்ணிமாவை மீட்டு, ஒசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பூர்ணிமாவை பரிசோதித்த மருத்துவர், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஒசூர் நகர போலீஸார், வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.