கிருஷ்ணகிரி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அம்பேத்கர்  சிலை  உடைக்கப்பட்டதைக் கண்டித்து,  கிருஷ்ணகிரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

அம்பேத்கர்  சிலை  உடைக்கப்பட்டதைக் கண்டித்து,  கிருஷ்ணகிரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில்  செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் கனியமுதன் தலைமை வகித்தார்.  பொருளாளர் முனிராவ்,  நகரச் செலாளர் சரவணன்,  மண்டலச் செயலாளர் நந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வேதாரண்யத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு அம்பேத்கரின் முழு உருவச்  சிலையை உடைத்தவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மாநிலத்தில் உள்ள தலைவர்களுக்கு, வெண்கலச் சிலை வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முழக்கங்களை எழுப்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT