கிருஷ்ணகிரி

உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.3.94 லட்சம் பறிமுதல்

DIN

உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.94 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி,  பென்னாகரம் அருகேயுள்ள நாகதாசம் பட்டியில் பறக்கும் படை அதிகாரி வில்சன் தலைமையிலான குழுவினர்  வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நேரத்தில் தருமபுரியை நோக்கிச் சென்ற காரை சோதனையிட்டனர்.  அப்போது காரில்  பென்னாகரம் அருகேயுள்ள நல்லாம்பட்டியைச் சேர்ந்த  பெருமாள் மகன்அருள்மணி(40) என்பவர்  உரிய ஆவணமின்றி ரூ.3.94 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
விசாரணையில் ஏலச் சீட்டு கட்டுவதற்காக பணம் எடுத்து செல்வதாக அருள்மணி தெரிவித்தார்.  இருப்பினும்,  பணம் பறிமுதல் செய்யப்பட்டு,  பென்னாகரம் வட்டாட்சியர் சதாசிவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. முறையான ஆவணங்களைக் காட்டி பணத்தை பெற்றுச் செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT