கிருஷ்ணகிரி

லாட்டரி சீட்டுகள் விற்ற மூவர் கைது

ஊத்தங்கரையில்  தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக மூவரை போலீஸார் கைது செய்தனர். 

DIN

ஊத்தங்கரையில்  தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக மூவரை போலீஸார் கைது செய்தனர். 
ஊத்தங்கரை காமராஜ் நகரைச் சேர்ந்த செரிப் (31), நாராயணநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (54), செட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (39)  ஆகியோர் அரசினால் தடை  செய்யப்பட்டுள்ள  லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற காவல் ஆய்வாளர் நடராஜன்  மற்றும் போலீஸார், லாட்டரி சீட்டுகள் விற்ற மூவரையும் பிடித்து வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 109 லாட்டரி சீட்டுகள்,  ரூ.300 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT