கிருஷ்ணகிரி

தளி அருகே மனநலம்  பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பம்

தளி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுமியை கர்ப்பமாக்கியவரை போலீஸார் தேடி வருகின்றனர். 

DIN

தளி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுமியை கர்ப்பமாக்கியவரை போலீஸார் தேடி வருகின்றனர். 
தளி அருகே உள்ள உனிசேநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட  16 வயது சிறுமி வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. கடந்த 6 மாதங்களாக சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து, அவரை கும்ளாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தார். 
அப்போது, சிறுமி 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் யார்? எனத் தெரியவில்லை. 
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  கலைவாணி வழக்குப்பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கியது யார் என விசாரணை நடத்தி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT