கிருஷ்ணகிரி

தேசிய கருத்தரங்கம்

DIN


கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் படைப்பாக்கம் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம், அண்மையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியின் தமிழ்த் துறையும், கேரளா தமிழ் பண்பாட்டு ஆய்வு மையமும் இணைந்து, வானவில் கே.ரவியின் படைப்பாக்கம் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கை நடத்தின. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, கல்லூரியின் முதல்வர் ரு.ரா.ஜெயந்தி, தலைமை வகித்தார். சேலம் பெரியார் பல்கலைக் கழக பேராசிரியரும், தமிழ்த் துறை தலைவருமான தி.பெரியசாமி, கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் சௌ.கீதா, கேரளா தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இயக்குநர் கு.அ.இராஜாராம், புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியரும், தமிழ்த் துறைத் தலைவருமான பா.ரவிக்குமார், ஓய்வுபெற்ற பேராசிரியர் நா.பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  சென்னை வானவில் பண்பாட்டு மையம், வானவில் கே.ரவி, ஏற்புரையாற்றினார். உதவிப் பேராசிரியர் தனலட்சுமி கருத்தரங்கை தொகுப்புரை வழங்கினார். கௌரவ விரிவுரையாளர் ராதா, நன்றி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT