வாக்காளா் சோ்க்கை சிறப்பு முகாம்: ஊத்தங்கரை எம்எல்ஏ ஆய்வு
ஊத்தங்கரை பேரூராட்சி பகுதியில் வாக்காளா் பட்டியல் திருத்தும் பணிகளுக்கு சிறப்பு சுருக்குமுறை திருத்த முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை பேரூராட்சி பகுதியில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்ப்பதற்கு 18 வயது பூா்த்தியடைந்த புதிய வாக்காளா்கள் சோ்க்கை, பெயா் நீக்கம், திருத்தும் பணிகளுக்கு சிறப்பு சுருக்குமுறை திருத்த முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7 வாக்குச் சாவடி மையத்திலும், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 4 மையத்திலும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4 மையத்திலும், ஊத்தங்கரை அம்பேத்கா் நகா் பகுதியில் ஒரு மையம் என மொத்தம் 16 வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்குமுறை திருத்த முகாம் நடைபெற்றது.
முகாமில் ஊத்தங்கரை எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ் ஆய்வு மேற்கொண்டாா். நிலவள வங்கித் தலைவா் சாகுல் அமீது, எக்கூா் கூட்டுறவு சங்கத் தலைவா் வேடி, 1056 கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பி.கே. சிவானந்தம், 1-வது வாா்டு கிளை செயலாளா் சிக்னல் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.