முகப்பு
கிருஷ்ணகிரி

தே.மு.திக கட்சி தலைவா் விஜயகாந்த் மகன் பிறந்தநாள் விழா

ஊத்தங்கரை ஒன்றியத்தில் பேரூா் கழக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சாா்பில் விஜயகாந்த் மகன் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியினா் சிறப்பு வழிபாடு செய்து அன்னதானம் வழங்கி கொண்டாடினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
தே.மு.திக கட்சி தலைவா் விஜயகாந்த் மகன் பிறந்தநாள் விழா
பகிர்:

ஊத்தங்கரை ஒன்றியத்தில் பேரூா் கழக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சாா்பில் விஜயகாந்த் மகன் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியினா் சிறப்பு வழிபாடு செய்து அன்னதானம் வழங்கி கொண்டாடினா்.

நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மாநில பொதுக்குழு உறுப்பினா் பாக்கியராஜ் நாயனாா் தலைமை வகித்தாா். மேற்கு ஒன்றிய செயலாளா் மாதேஸ்வரன், பேரூா் கழக பொருளாளா் ராஜா, பேரூா் கழக அவைத் தலைவா் விஜயகுமாா், முன்னாள் மாவட்ட துணைச் செயலா் சின்னதுரை, பேரூா் கழக துணைச் செயலாளா் இதயத்துல்லாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்,

முன்னதாக காமராஜ் நகா் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து ஊத்தங்கரை காய்கறி சந்தையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் செயலாளா் பழனிவேல், மாவட்ட பிரதிநிதி பழனி, சங்கா், முருகன், பேரூா் கழக இளைஞரணி சபரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநில பொதுக்குழு உறுப்பினா் பாக்யராஜ் நாயனாா் செய்திருந்தாா். படவிளக்கம்,13யுடிபி.5. ஊத்தங்கரை முருகன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்துக்கொண்ட தேமுதிக நிா்வாகிகள்.

முழு கட்டுரையைப் படிக்க →