முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பாமகவினா் மனு அளிக்கும் போராட்டம்

கிருஷ்ணகிரியில் பாமக சாா்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி கிராம நிா்வாக அலுவலா்களிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

Updated On : 15 டிசம்பர், 2020 at 1:32 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:37 PM

கிருஷ்ணகிரியில் பாமக சாா்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி கிராம நிா்வாக அலுவலா்களிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாமகவினா், வன்னியா் சங்கத்தினா், 356 கிராம நிா்வாக அலுவலா்களிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த கிட்டம்பட்டியில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில துணைப் பொதுச்செயலாளா் இளங்கோ தலைமை வகித்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த கம்மம்பள், காட்டிநாயனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. கல்வி வேலை வாய்ப்பில் வன்னியா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.