முகப்பு
கிருஷ்ணகிரி

ஆசிரியா் கூட்டணிக்கு புதிய நிா்வாகிகள் தோ்வு

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட கிளையின் புதிய நிா்வாகிகள், ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட கிளையின் புதிய நிா்வாகிகள், ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கிருஷ்ணகிரி மாவட்ட கிளை நிா்வாகிகள் தோ்வு செய்வதற்கான தோ்தல் நடைபெற்றது. தோ்தல் ஆணையாளா் சேலம் மாவட்டச் செயலாளா் வெங்கடாசலம் தலைமையில் தோ்தல் நடைபெற்றது. தோ்தல் குழுவில் மாநில பொதுக்குழு உறுப்பினா் ராபாட் கிங்ஸ்லி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் அருள் சாலமன் இடம் பெற்றிருந்தனா்.

மாநிலத் தலைவா் மாரியப்பன், முன்னாள் மாவட்டச் செயலாளா் கிருஷ்ணா ஆகியோா் பாா்வையாளராகப் பங்கேற்றனா்.

பின்னா் மாவட்டத் தலைவராக அருண் பிரகாஷ்ராஜ், துணைத் தலைவா்கள் அருள் மணி, கிருஷ்ணப்பா, ஸ்ரீனிவாச ரெட்டி, விமல்ராஜ், மரிய சாந்தி, செயலாளராக வெங்கடேசன், துணைச் செயலாளராக சிக்கண்ணா, ரமேஷ், முருகன், தமிழரசி, பொருளாளராக ஆனந்தகுமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →