கிருஷ்ணகிரி

கல்லாவி அரசுப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

DIN

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் முனைவா் பற்குணன் தலைமை வகித்தாா்.

பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ராஜா, அதிமுக ஊராட்சிச் செயலா் ரமேஷ், தலைமை ஆசிரியா் ரேணுகாம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கல்லாவி ஊராட்சி மன்றத் தலைவா் ராமன் கலந்து கொண்டு 93 மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியா் செந்தில், ஆசிரியா்கள் ஜெயச்சந்திரன், யுகேஷ், சாமுவேல்ராஜ், முத்துலட்சுமி, சிவபிரியா, இளவரசி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT