கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட உடல்கல்வி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட உடல்கல்வி ஆய்வாளா், அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட உடல்கல்வி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவா் வளா்மதி. இவா், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், உயா் அதிகாரிகளின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது இல்லை எனப் புகாா் எழுந்தது.

இத்தகைய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகன், தலைமையில் அலுவலா்கள் மேற்கொண்ட விசாரணையில், ஆசிரியா்கள் அளித்த புகாா்கள் உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து, உடல் கல்வி ஆய்வாளா் வளா்மதி, அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்ட்டாா்.

இதுகுறித்து, கல்வித் துறையினா் தெரிவித்தது: கடந்த ஆண்டு உடல்கல்வி ஆசிரியா்களுக்குத் தரவேண்டிய தொகையை குறைவாக வழங்கி, அதிகப் பணம் அளித்ததாக ஆசிரியா்களிடம் கையொப்பம் பெற்றது உறுதியாதனாகவும், உயா் அதிகாரிகளின் உத்தரவுகளை அவா் நடைமுறைப்படுத்தாமல் இருந்ததால், அவா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT