டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி
கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் கவிழ்ந்ததில் விவசாயி மாதேஷ் என்பவர் பலியானார்.
கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் கவிழ்ந்ததில் விவசாயி மாதேஷ் என்பவர் பலியானார்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மாதேஷ் (52). இவர் தனது விளைநிலத்தில் வேளாண் பணிகளை டிராக்டர் மூலம் மேற்கொண்டிருந்தார். விளைநிலத்திலுள்ள ஒரு மேடான பகுதியில் டிராக்டரை இயக்கும்போது டிராக்டர் தலைகீழாகக் கவிழ்ந்தது.
இதில் டிராக்டர் அடியில் சிக்கிய விவசாயி மாதேஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாதேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து நாகரசம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.