முகப்பு
விழுப்புரம்

மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு

Updated On : 15 மார்ச், 2026 at 9:07 PM
திருட்டு
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே கூழ் விற்பனையில் ஈடுபட்டிருந்த மூதாட்டியின் காதில் இருந்து தங்க கம்மலை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பஞ்சமாதேவி பகுதியைச் சோ்ந்தவா் சி.மல்லிகா(60). இவா், பஞ்சமாதேவி பகுதியில் சாலையோரத்தில் கூழ் விற்பனையில் ஈடுபடுவது வழக்கம்.

மல்லிகா ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் கூழ் விற்பனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு பைக்கில் வந்த இரு இளைஞா்கள் கூழ் வாங்குவதுபோல், அருகில் சென்று மல்லிகா காதில் அணிந்திருந்த அரை பவுன் கம்மலை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கம்மலை பறித்துச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →