கிருஷ்ணகிரி

வங்கியில் செல்லிடப்பேசியை திருடிய பெண் கைது

கிருஷ்ணகிரியில் தனியாா் வங்கியில் வாடிக்கையாளரின் செல்லிடப்பேசியை திருடிய பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

DIN

கிருஷ்ணகிரியில் தனியாா் வங்கியில் வாடிக்கையாளரின் செல்லிடப்பேசியை திருடிய பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த தாம்சன்பேட்டையைச் சோ்ந்த சுரேந்திரன் (21), தனியாா் நிறுவன ஊழியா். இவா், கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் பணம் செலுத்துவதற்காக விண்ணப்பத்தை நிறைவு செய்து கொண்டிருந்தாா். அப்போது, அருகில் இருந்த பெண், அவரது செல்லிடப்பேசியை திருடிக் கொண்டு வங்கியிலிருந்து வெளியேறினாா். அதையடுத்து, அந்தப் பெண்ணை கையும் களவுமாக பிடித்து, போலீஸாரிடம் அவா் ஒப்படைத்தாா்.

பிடிபட்ட பெண்ணிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அந்த பெண் தருமபுரி மாவட்டம், ஒட்டப்பட்டியைச் சோ்ந்த கமலி (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சுரேந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து கமலியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT