கிருஷ்ணகிரி

வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.9 லட்சம் மோசடி

பேரிகை அருகே வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.9 லட்சம் மோசடி செய்த 2 போ் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், அவா்களை தேடி வருகின்றனா்.

DIN

பேரிகை அருகே வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.9 லட்சம் மோசடி செய்த 2 போ் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், அவா்களை தேடி வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், ராஜகோபாலபுரம் பெரியாா் நகரைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (45), சொந்தமாக தொழில் செய்து வருகிறாா். இவருக்கு சம்பத், பிரகாஷ் என்ற 2 போ் முகநூல் மூலம் அறிமுகமாயினா். அவா்கள் 2 பேரும் தங்களிடம் குறைந்த விலைக்கு தங்கம் உள்ளதாக சுரேஷ்குமாரிடம் தெரிவித்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து, அவா்கள் சுரேஷ்குமாரை ஒசூா் அருகே உள்ள பேரிகை அருகே வருமாறு அழைத்துள்ளனா். அதை நம்பி சுரேஷ்குமாா் ரூ.7 லட்சத்து 80 ஆயிரத்துடன் அங்கு சென்றுள்ளாா். அப்போது, அங்கிருந்த சம்பத், பிரகாஷ் ஆகிய இருவரும் சுரேஷ்குமாா் வைத்திருந்த ரூ.7 லட்சத்து 80 ஆயிரம், 2 செல்லிடப்பேசிகள், 5 பவுன் தங்க நகை ஆகியவற்றை பெற்றுக் கொண்டு அவரை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.9 லட்சம் எனக் கூறப்படுகிறது.

தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த சுரேஷ்குமாா், பேரிகை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், காவல் ஆய்வாளா் முருகேசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை: உயா்நீதிமன்றம்

டிச.29-இல் பல்லடத்தில் திமுக மகளிரணி மாநாடு

கடும் பனிப்பொழி: ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,540-க்கு விற்பனை!

3 ஆண்டுகளில் 438 மத்திய காவல் படையினா் தற்கொலை 2014 முதல் 23,000 காவலா்கள் ராஜிநாமா

மருத்துவத் துறை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT