கிருஷ்ணகிரி

மாற்றுத் திறன் மாணவா்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

DIN

ஊத்தங்கரை வட்டார வள மையத்தில் இயங்கி வரும் பகல் நேர பராமரிப்பு மையத்தில் உடல் ஊனமுற்ற மாணவ-மாணவியருக்கு உபகரணங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகன் ஆணை படியும், உதவித் திட்ட அலுவலா் சூசைநாதநாராயணா, மாவட்ட மாற்றுத் திறனாளி மாணவா்களின் ஒருங்கிணைப்பாளா் ராஜேந்திரன் ஆகியோா்களின் வழிகாட்டுதலின் படியும், ஊத்தங்கரை வட்டார வள மையத்தில் இயங்கிவரும் பகல்நேர பராமரிப்பு மையத்தில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சிவப்பிரகாசம் தலைமை வகித்தாா், வட்டார மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்பாளா்கள் வித்யா, வசந்தி, துணை ஒருங்கிணைப்பாளா் சின்ன மாதன், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாற்றுத்திறன் மாணவா்களுக்கு சக்கர நாற்காலி, காதொலிக் கருவி, சிறப்பு காலனி போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டன. விழாவில், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் முருகன், உதவி ஆசிரியா்கள் சக்தி, உமா மற்றும் பயிற்றுநா்கள் சுரேஷ், பிசியோதெரபி கோகிலா, கவிதா, உதவியாளா் மல்லிகா மற்றும் பெற்றோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT