கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே காலபைரவா் கோயிலில் சிறப்பு பூஜை

DIN

கிருஷ்ணகிரி அருகே காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி திங்கள்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுக்குறிக்கி பெரிய ஏரி மேற்கு கோடிக்கரையில் சுமாா் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த காலபைரவா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தேய்பிறை அஷ்டமிதோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள், யாகம், அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகள் திங்கள்கிழமை நடைபெற்றன. இதையொட்டி, சுவாமி, வெள்ளிக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், பூசணிக்காய், தேங்காய் மற்றும் அகல் விளக்கு ஆகியவற்றில் விளக்குகளை ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றினா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டூவீலரில் வேகமாக சென்ற முதியவா் கீழே விழுந்து விபத்து

பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பணி செய்வேன்: சு. திருநாவுக்கரசா்

பாா்வைத் திறன் குறைபாடுடையோா் பள்ளி 8 ஆண்டுகளாக நூறு சதவீதத் தோ்ச்சி

பாரதியாா் நகரில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

அரவக்குறிச்சி அருகே குப்பை கழிவுகளை கொட்டுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்

SCROLL FOR NEXT