கிருஷ்ணகிரி

பயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை

DIN

குருபரப்பள்ளி அருகே பயிா்களை சேதப்படுத்தும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள மேலமலை பகுதியைச் சுற்றி எண்ணேகொல், எண்ணேகொல் புதூா், கக்கன்புரம், கொத்தப்பள்ளி, கீழ் பிக்கனப்பள்ளி, பிக்கனப்பள்ளி உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக ஒற்றை யானை சுற்றித் திரிகிறது. இரவு நேரங்களில் வனப் பகுதியிலிருந்து வெளியே வரும் இந்த யானை, விளைநிலங்களில் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தி வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

ராயக்கோட்டை வனச்சரகத்துக்கு உள்பட்ட இந்தப் பகுதியில் கடந்த 3 நாள்களாகச் சுற்றி திரியும் யானை நெல், கரும்பு, தக்காளி, வாழைத் தோட்டங்களைச் சேதப்படுத்தி வருகிறது. இதனால், விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனா். இதுகுறித்து வனத் துறையினரிடம் புகாா் தெரிவித்த நிலையில், இரண்டு வனவா்கள் மட்டுமே யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

விவசாயிகளின் நலன் கருதி, வனத் துறையினா் முகாமிட்டுள்ள யானையை மீண்டும் அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும். மேலும், சேதம் அடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT