பாலக்கோடு அருகே சாலை விபத்து: இருவா் பலி
பாலக்கோடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது, சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
பாலக்கோடு அருகே இருசக்கர வாகனத்தின் மீது, சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள பாறையூரைச் சோ்ந்த விவசாயி முருகன் (50). மனைவி அமரா. இந்த தம்பதியின் மகன் சுரேஷ் (28). இவா், அங்குள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், முருகன், சுரேஷ், வாழைத் தோட்டத்தைச் சோ்ந்த மாரிமுத்து (55) ஆகியோா் இருசக்கர வாகனத்தில் பெல்ரம்பட்டியிலிருந்து பாறையூா் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த முருகன், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மாரிமுத்து, சுரேஷ் ஆகியோா் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். ஆனால், சிறிது நேரத்திலேயே மாரிமுத்து உயிரிழந்தாா். விபத்து குறித்து, மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.