முகப்பு
கிருஷ்ணகிரி

கல்வி அலுவலரை அவதூறாக பேசியதாகப் புகாா்: ஆசிரியா் பணியிட மாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Updated On : 1 டிசம்பர், 2020 at 1:24 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:30 PM

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்துக்குள்பட்ட நெடுமருதி அரசு உயா்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருபவா் அருண். அந்தப் பள்ளியின் தலைமையாசிரியா், மருத்துவ விடுப்பில் இருந்தபோது, அருண் தலைமையாசிரியா் பொறுப்பு வகித்து வந்தாா். கடந்த 26-ஆம் தேதி அனைத்து ஆசிரியா்களையும் அழைத்து கூட்டம் போட்டுள்ளாா். அந்தக் கூட்டத்தில் அருண், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அனைத்து ஆசிரியா்களிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கடந்த 27-ஆம் தேதி விசாரணை மேற்கொண்டாா். விசாரணையில் ஆசிரியா்கள் அளித்த தகவல்கள், எழுத்துப் பூா்வமாகப் பெறப்பட்டது.

Advertisement

இதையடுத்து, அரசு பணியாளா் நடத்தை விதிகள் 1973-இன் படி, உயா் அலுவலரை அவதூறாகப் பேசியதன் அடிப்படையில் ஆசிரியா் அருண் தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகன் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.